கவிதைகள்

போய் வருகிறேன்

லீனா மணிமேகலை

இப்போதெல்லாம் போய் வருகிறேன் என்று யாரும் சொல்லிச் செல்வதில்லை அப்படியே மறைந்துப் போகிறார்கள் வழியனுப்பும் வகையில்லாமல் சேமித்து வைத்திருக்கும் கண்ணீரில் சில துளிகள் கவனிக்கப்படாமல் வழிகின்றன தொடர்பறுந்து போன உரையாடலின் இறுதி வரி நம்முடையதாக இருக்கும்போது விம்மும் மனதை தேற்ற உரியவரின் […]

புன்னகை

லீனா மணிமேகலை

அவனை எழுதிவிட முடியாமல் தோற்கிறேன் ஒரு நாக்கிலோ, ஒரு வார்த்தையிலோ ஒரு புகைப்பட சட்டத்திற்குள்ளோ அடங்கிவிட முடியாமல் பிதுங்குகிறது அவன் என்ற சலனம் எரிவதற்கு எதையும் விட்டுவிடாமல் அணைத்துவிடும் அவனிடமிருந்து எதையாவது ஒளிப்பதற்கு திணறுகிறது மொழி வலிக்கிறது ஆனால் வலிக்கவில்லை இடையில் […]

பிற்பகலின் நம்பிக்கை போன்ற மலை

அகச்சேரன்

நடுப்பகலில் நிராதரவாய் புறவழிச் சாலையில் இறக்கி விடப்படுகிறீர்கள் அடிபட்டு இறந்து இரண்டு நாளான நாயின் நைந்த சடலம் உங்கள் கண்களில் தட்டுப்பட்டிருக்கக் கூடாது அக் கடும்பகலில் நாய்க்கு ஆதரவாக நிற்க முடியாதுதான் ஆகையால் உங்கள் பசியால் பூமியின் விளிம்பில் நிற்பதாய் உணரும் […]

உனது நினைவுச் சின்னம் – உனது மௌனம் – உனது பிணம்

அகச்சேரன்

புத்துலக வரைபடத்தில் இடம்பெற்றிருந்த உனது நினைவுச் சின்னத்தைக் காண்பிக்க வந்தபோதும் நீ மதுச்சாலையில்தான் இருந்தாய் எனக்கு மது வாங்கினாய் மொத்த இரைச்சலையும் தாங்கிய பின்னும் உனது மௌனம் வீரியத்துடனிருந்தது திடீரென நுழைந்த காவலர்கள் வரைபடத்தைக் கைப்பற்றி நம்மைக் கைது செய்தனர் (அரசின் […]

மிகுபோதையின் சிறுநீர்ச் சொட்டே….

அகச்சேரன்

மிகுபோதையின் பிடரியில் விழுந்தது மரண அடி மிகுபோதையும் காக்கி உடுப்பணிந்த மரண அடியும் தங்கள் பிணைப்பை உறுதி செய்து கொண்டன மிகுபோதையோ சிலைகளின் அடியில் சிறுநீர் கழித்து பீடத்தை நொறுங்கச் செய்ய வல்லது சிலைகளின் அசைவின்மையைத் தொழுவது ஜீப்பில் வலம் வரும் […]

காணாமல் போகும் மலைகள்

ஸ்ரீ நேசன்

மலையின் உள்ளே ஒரு கோட்டை கோட்டையின் உள்ளே ஒரு கோயில் கோயிலின் உள்ளே ஒரு சிலை சிலையின் உள்ளே ஒரு தெய்வம் தெய்வம் அது இப்போது அங்கில்லை சிலை இருக்கிறது கோயில் இருக்கிறது கோட்டை இருக்கிறது மலை இருக்கிறது தெய்வமும் இருக்கிறது […]

ஒர் இலைச் சருகு

ஸ்ரீ நேசன்

கனத்த மனத்துடன் இருந்தேன் இறக்கிவிட தோதான இடம் தோதான பொழுது தோதான முகம் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன் நண்பர்களிடம் சென்றேன் திரும்பினேன் ஏரியின் அந்திக் கருக்கலுக்குள் இருந்தும் மீண்டேன் மலையின் உச்சிவரை ஏறியும் இறங்கினேன் சுமை இறங்கியதாய் இல்லை மழை மேகம் திரண்டு […]

அம்சம்

கண்டராதித்தன்

வளர்பிறை நாட்களை நேசிப்பவன் அந்நாட்களின் இரவுகளை வெட்டவெளிகளில் கழிப்பது வழக்கம் எப்போதும் நல்வாய்ப்பு கிட்டாத வாழ்க்கைதான். அன்றொருநாள் அந்தியில் நீர்நிலை சூழ்ந்த சிற்றூருக்கு பயணப்பட்டான். தென்னைகள் நிறைந்த ஊரானதால் அந்தியே முன்னிரவைப்போல தோற்றப்பிழை காட்டியது. பசிக்கு அன்னம்பாலிக்கும் பேரிளம்பெண் எங்கிருந்தோ நாயை […]

யோக்கியதை – சில குறிப்புகள்.

கண்டராதித்தன்

சதா யோக்கியதையை கேள்வி கேட்கிறது யோக்கியத்தனம் அயோக்கியதைக்கு இந்த சிக்கல் இல்லை இல்லவே இல்லை. நல்லவனாயிருப்பதைக் காப்பாற்றத் தன் வாழ்நாளைச் செலவழிக்கிறான் ஒருவன். அதையொரு பன்னீர் கரும்பைப்போல கடித்துத் துப்பிச்செல்கிறான் மற்றொருவன். காட்டாற்று வெள்ளத்தின் ஓரம் நின்று கை கால் முகம் […]

காலமாற்றத்தின் காதல்.

கண்டராதித்தன்

கொடுங்காநல்லூர் தேர்முட்டியிலிருந்து அந்தகன் பள்ளியறைக்குச் சென்றதற்கு மறுநாள் காலமாற்றத்தைக் கண்டுணரா மூடன் குடிபோதையில் இருண்ட வீதியில் நின்று ஊர்பற்றும் தழலொன்றை வைத்திருந்த அரூபியைத் தனக்குத்தெரியும் என்றான் கூடவே நாய்கள் கேவியழ நரிகள் கோடியைவிட்டு ஊர் எல்லைவரை எட்டிப்பார்த்தன அது நல்ல மழைக்கும்,நல்லகாற்றுக்குமான […]