கசாக்கின் இதிகாசம் – ஓ.வி.விஜயன் [தமிழில் : யூமா.வாசுகி] (நாவல்)
கசாக்கின் இதிகாசம்
ஓ.வி.விஜயன்

தமிழில் :யூமா.வாசுகி.காலச்சுவடு
பதிப்பகம்,நாகர்கோயில்,பக்கம்.240
விலை.ரூ.225.00

இரு உலக யுத்தங்களின் பின் மேற்கில் தோன்றிய நவீனத்துவம் உலகம் முழுவதிலுமான கலை இலக்கிய போக்குகளில் நீடித்த செல்வாக்கை செலுத்திய சித்தாந்தமாகும்.சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் ஆங்கிலக்கல்வி வாயிலாக இம்மதிப்பீடுகள் பிரதேச மொழிகளிலும் பரவலாயிற்று.மேற்கின் மதிப்பிடுகளை அவ்விதமாகவே நகலெடுத்த எழுத்துக்கள் காலத்தில் மங்கிப்போயின.மாறாக அம்மதிப்பீடுகள் நமது கீழைத்தேய மனதால் உள்வாங்கப்படும் போது உருவாகும் போராட்டத்தை தத்தளிப்பை மாற்றத்தை நேர்மையாக சித்தரித்த நாவல்கள் பலவும் இன்றளவும் இவ்வடிவத்தின் செவ்வியல் பிரதிகளாக இந்திய மொழிகளில் விளங்குகின்றன.(உ-ம் : நீலகண்ட பறவையைத்தேடி,ஆரோக்கிய நிகேதனம்,வாழ்க்கை ஒரு நாடகம்,சமஸ்காரா,அழிந்த பிறகு.) அவ்வகையில் மலையாளமொழிக்கு நவீனத்துவம் நல்கிய கொடை ‘கசாக்கின் இதிகாசம்’.இந்நாவலில் ஓ.வி.விஜயன் கையாண்டிருக்கும் மயக்கமூட்டும் நடையும் அதன் பிரதேச மணமும் தற்செயல் போலத் தோன்றும் அதன் பலகுரல் தன்மையும் உணர்ச்சி தழுதழுப்பற்ற விட்டேற்றியான வாழ்க்கை நோக்கும் கூடி இந்நாவலை முன்ஒப்புமையற்ற ஒன்றாக ஆக்கியுள்ளது.எப்போதோ தமிழில் வந்திருக்க வேண்டிய நாவல் பல தடங்கள்களை கடந்து யூமா வாசுகியின் நேர்த்தியான மொழியாக்கத்தில் தற்போது வந்துள்ளது.புதிர்த்தன்மையை இழக்காமலிருப்பது இந்நாவலின் பொருண்மைக்குச் சாட்சி.

மாற்றங்களுக்கு நடுவிலும் மாறாது எஞ்சும் ஒன்றை சுட்டும் புராணம்.