தீமையின் மலர்கள் – ஷார்ல் போதெலெர் [தமிழில் – குமரன் வளவன்](கவிதை)
தீமையின் மலர்கள்
ஷார்ல் போதெலெர்

தமிழில்-குமரன் வளவன்
க்ரியா பதிப்பகம்,சென்னை
பக்கம்.94..;ரூ.125.

‘வாழ்க்கை ஒரு மருத்துவமனை.கட்டில் மாறத்தூண்டும் ஆசை அங்கு ஒவ்வொரு நோயாளியையும் ஆட்கொள்கிறது.’என எழுதிய பியர் சார்ல் போதலேர் பாரிஸில் பிறந்து வளர்ந்தவர்.தன்முனைப்புடன் கூடிய கட்டற்ற வாழ்க்கையை தேர்ந்து கொண்டார்.அழகற்ற அற்ப பொருட்களின்றும் அழகை தரிசிப்பதே அவரது கலையின் நோக்கமாகயிருந்தது.1857ல் வெளியான அவருடைய முதல் மற்றும் ஒரே கவிதை நூலான ‘தீமையின் மலர்கள்’படிப்பவர்கள் உள்ளத்தில் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு,பிரெஞ்சு நீதி மன்றத்தால் 300 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் பிறகான வரலாற்றில் இந்நூலளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய கவிதை நூல் எதுவுமில்லை என்றானது.அதன் பின்னர் கிளைத்துச் செழித்த பல்வேறு கவிதைப் போக்குகளுக்கான ‘மூல மாதிரியாக’ இந்நூலே கருதப்பட்டது.குமரன் வளவனால பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் கவிதையின் தீவிர வாசகர்கள் தவறவிடக்கூடாத ஒன்று.

ஆன்மாவின் நறுமணம் வீசும் மலர்கள்.