நிலவொளி என்னும் இரகசியத் துணை – எம்.டி.முத்துகுமாரசாமி (கட்டுரை)
நிலவொளி எனும் இரகசியத்துணை
எம்.டி.முத்துகுமாரசாமி

அடையாளம் வெளியீடு,
புத்தாநத்தம்
பக்.264.விலை.ரூ.200.

இலக்கியம் என்பது முழுமுற்றாக மொழியினின்றும் பிறக்குமொரு தனிப்பொருள் அன்று.அது பிற துறைகளான கலைகள்,பண்பாடு,மதம்,தத்துவம்,அறிவியல்,அரசியல்,பொருளாதாரம் போன்றவற்றோடு கொள்ளும் ஊடாட்டங்கள் வழியாகவே தனக்கான ஊட்டத்தைப் பெற்று மொழி வழியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறது.எனவே இலக்கியத்தை பிற துறைகள் சார்ந்த அறிவும் கோட்பாடுகளின் பரிச்சயமும் கொண்ட விரிவான விமரிசன அணுகல்கள் தேவை என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட வாசகர்கள் பலர் தமிழில் உண்டு.அவர்களுக்கு எம்.டி.எம். பற்றிய அறிமுகம் தேவையில்லை.கடந்த முப்பது வருட இலக்கிய கோட்பாட்டு வாசிப்புகளினின்றும் அணுக்கமாய் பெற்ற பார்வையினடிப்படையில் இலக்கியம்,இசை,உணவு,பயணம்,நூல்கள் பற்றி அவர் இணையத்தில் எழுதிய இருபது கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.வழக்கமாக இத்தகைய விமர்சன நூல்களில் காணப்படும் இறுக்கமான மொழிக்கு பதிலாக நெகிழ்வான தன்முனைப்பற்ற நடை கையாளப்பட்டிருப்பது தடையற்ற வாசிப்புக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

நமது மூளை கரையுடைத்து பரவும் தருணங்களிலேயே நம் அறிவும் புலனுணர்வுகளும் விரிவடைகின்றன என்பதைச் சுட்டும் கட்டுரைகள்.