மிகுபோதையின் பிடரியில் விழுந்தது மரண அடி
மிகுபோதையும்
காக்கி உடுப்பணிந்த மரண அடியும்
தங்கள் பிணைப்பை
உறுதி செய்து கொண்டன

மிகுபோதையோ சிலைகளின் அடியில் சிறுநீர் கழித்து
பீடத்தை நொறுங்கச் செய்ய வல்லது

சிலைகளின் அசைவின்மையைத் தொழுவது
ஜீப்பில் வலம் வரும் மரண அடி

சிலைகளின் தலையில் இருந்துவிட்டுப் போகும்
காகங்களிடம் மரண அடியின் பாச்சா ஒருநாளும் பலிப்பதில்லை

சிலைகளைத் தகர்க்க
பீடத்தில் இன்னும் பெய்க
என் மிகுபோதையின் சிறுநீர்ச் சொட்டே.

அடுத்து