நடுப்பகலில் நிராதரவாய்
புறவழிச் சாலையில் இறக்கி விடப்படுகிறீர்கள்

அடிபட்டு இறந்து இரண்டு நாளான நாயின் நைந்த சடலம்
உங்கள் கண்களில் தட்டுப்பட்டிருக்கக் கூடாது

அக் கடும்பகலில் நாய்க்கு ஆதரவாக நிற்க முடியாதுதான்
ஆகையால் உங்கள் பசியால் பூமியின் விளிம்பில் நிற்பதாய்
உணரும் கணம்
திரும்பி அருகிருக்கும் மலையைப் பார்க்கிறீர்கள்

நிழல் உங்களை வரவேற்கிறது
நடக்கிறீர்கள்

அடைந்து சிறிய கடையில் பசியாறி
கைகழுவும் பின்பக்கம்
நீங்கள் பார்க்கிறீர்கள்

சூரியனுக்கும் மேலே
வளர்ந்திருக்கும் மலை
தந்த நிழலில்
நான்கு நாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருப்பதை.

அடுத்து